கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 75-வது வார்டுக்குட்பட்ட பாரதிதாசன் வீதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப்பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று அபேட் கொசு மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றும் பணியில் ஈடுபடுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பாரதிதாசன் வீதியில் உள்ள மாநகராட்சி பூங்காவினையும், மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தினையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 56-வது வார்டுக்குட்பட்ட பீளமேடு, சந்திரகாந்தி நகர் பகுதியில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடத்தில் அறிய வகை மரங்கள் நடும் பணிகளை துவக்கி வைத்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.