மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் பிரதமரின் ஆத்மநிர்பா் நிதி திட்டத்தின்கீழ் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ்கள், மாநகராட்சி பிரதான அலுவலக தனி முகாமில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.
வடக்கு மண்டலத்தில் மார்ச் 7-ஆம் தேதி முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும்.
எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.