இந்த ஆண்டு இறுதிக்குள் கோவையில் 'டெக் பார்க்' திட்ட கட்டுமானம் துவங்கும் என தகவல்

சரவணம்பட்டி அருகே வரும் என்று எதிர்பார்க்கபட்ட டெக் பார்க் திட்டம் தற்போது சோமையம்பாளையம் கிராம பகுதியில், அரசு - தனியார் கூட்டாக அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்ப நகரம் சுமார் 321 ஏக்கர் நிலப்பரப்பில் சோமையம்பாளையம் கிராம பகுதியில் அமைய உள்ளது.


கோவை: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ( ஐ.டி.) துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை தொடர்ந்து தந்து வரும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான இடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் மேலும் சிறப்பான ஒரு மையமாக விளங்க வேண்டும் என்பதற்காக 2023ன் துவக்கத்தில் தமிழகத்தின் 3 இடங்களில் (சென்னை, கோவை மற்றும் ஓசூர்) அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள் திட்டம் (Tamil Nadu Tech City) அறிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள IT காரிடோர் பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஓசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பிலும் தொழில்நுட்ப நகரங்கள் அமையவுள்ளதாக கடந்த ஆண்டு அரசு தரப்பில் கூறப்பட்டது.

கோவையில் தொழில்நுட்ப நகரம் அமைக்க நிலம் கண்டறியப்பட்டு வந்த நிலையில் சென்ற ஆண்டு இந்த திட்டத்திற்கு கோவை சரவணம்பட்டியை அடுத்த சத்தி சாலையில் பல ஏக்கர் நிலப்பரப்பு தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கோவை வந்த தகவல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை ஐ.டி. துறையில் சிறப்பான வளர்ச்சியை வெளிப்படுத்திவருவதாகவும் கோவையில் இந்த அதிநவீன தொழில்நுட்ப நகர திட்டத்திற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள் திட்டத்தை செயல்படுத்திட செயல் திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு அரசு அதை வெளி கொண்டு வரும் என தெரிவித்தார்.

இதற்கு நடுவே சரவணம்பட்டி அருகே வரும் என்று எதிர்பார்க்கபட்ட இந்த திட்டம் தற்போது சோமையம்பாளையம் கிராம பகுதியில், அரசு - தனியார் கூட்டாக அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்ப நகரம் சுமார் 321 ஏக்கர் நிலப்பரப்பில் சோமையம்பாளையம் கிராம பகுதியில் அமைய உள்ளது.

இதில் ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வு-ஆராய்ச்சி கூடம், ஐடி துறை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள், தங்கும் இடங்கள், வணிகத்திற்கான இடங்கள், முதல் ரக அலுவலகத்திற்கான இடங்கள், பொழுதுபோக்குக்கான அம்சங்கள் மற்றும் வளாகங்கள், உணவகங்கள், பல திரைகள் கொண்ட திரைப்பட வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், தடை இல்ல மின்சாரம், சீரான குடிநீர் விநியோகம், பூங்காக்கள், மிக வேகமான இன்டெர்ன்ட் வசதி (OPTICAL FIBER CABLE INFRA) போன்ற பல வசதிகள் உள்ளடங்கும்.

கோவையின் ஐ.டி. துறை வளர்ச்சிக்கு இது மேலும் உதவிடும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வனப்பகுதிக்கும், யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் இடத்திற்கும் அருகில் உள்ளதால் இந்த இடத்தில் இந்த திட்டம் அமைவதற்கு பதில் வேறு இடத்தில் அமைவது சரியானதாக இருக்கும் என்ற கருத்து எழுந்து வருகிறது.

இந்நிலையில், இந்த திட்டம் அமையவுள்ள இடத்தில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் தள மதிப்பீடு செய்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...