கோவை சித்தாபுதூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் - நடிகை கஸ்தூரி பங்கேற்பு

திமுக கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருப்பதாகவும், எதிரணி வலுவாக இல்லாததால் நிச்சயமாக திமுக அதிக இடங்களில் வெல்லும் என்பது தான் நிதர்சனமான உண்மை என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 5 மணிக்கு துவங்கிய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசுவார் என கூறப்பட்டது. ஆனால் இரவு 10 மணிக்கு கூட்டம் முடிவடைந்த போது அங்கு வந்து சேர்ந்தார். நடிகை கஸ்தூரிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட நிலையில் மேடையில் பேசிய கஸ்தூரி, இந்த நேரத்திலும் தனக்காக காத்திருந்தவர்களுக்கு நன்றி என்றும், கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு வாழ்த்துகள் என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அது உண்மைதான் தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றார்.



அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.



தொடர்ந்து பேசிய கஸ்தூரி எதிர்க்கட்சி வலுவாக இல்லாத காரணத்தால் திமுக விற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதிமுக மற்றும் பாஜக ஒன்றாக இல்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போன்று திமுக கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து இருப்பதாகவும், எதிரணி வலுவாக இல்லாததால் நிச்சயமாக திமுக அதிக இடங்களில் வெல்லும் என்பது தான் நிதர்சனமான உண்மை என்றும் சுட்டிக்காட்டினர்.

வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற கூட்டத்த்இல் பங்கேற்ற நீங்கள் திமுக விற்கு சாதகமாக பேசுகிறீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பவே, உண்மையை தானே சொன்னேன் நான் பாஜக உறுப்பினர் இல்லை என்றும், ஒரு வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே என கூறியதுடன், பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றும் தனது வாக்கு பாஜகவிற்கு தான் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது தொடர்பான கேள்விக்கு, தங்கள் கட்சி வெற்றி பெறும் என கூறுவது இயல்பான ஒன்றுதான் என்றார். இதேபோல் நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் அதுதான் அவர்கள் பணி பொது கருத்துக்களை நடிகர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி, அதிலிருந்து தான் மாறுபட்டிருப்பதாகவும் சமூகத்தின் மீது அக்கறையுள்ள யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், அதில் நடிகர் நடிகை விதிவிலக்கல்ல என்றும் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு, தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், ஒரு உறுதிப்பாட்டுடன் நடிகர் விஜய் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...