கொல்லம் - திருப்பதி இடையே புதிய ரயில் சேவை- கோவையில் நின்று செல்லும் என அறிவிப்பு

கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்லத்திலிருந்து திருப்பதி இடையே, வாரமிரு நாட்கள் புதிய ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில், கோவையில் நின்று செல்லும் என்பதால், திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் ரயில் வசதி கிடைக்கவுள்ளது.

அதன்படி கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து, ஆந்திராவிலுள்ள திருப்பதிக்கு வாரமிரு முறை ரயிலை புதிதாக இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வரும் 15ம் தேதியிலிருந்து, திருப்பதியிலிருந்து இயக்கப்படவுள்ளது.

இந்த ரயில், திருப்பதியில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்கள், மதியம் 2:40 மணிக்குப் புறப்பட்டு, கொல்லத்துக்கு மறுநாள் காலை 6:20க்குச் சென்றடையும். கொல்லத்திலிருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை 10:45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 3:20 மணிக்கு திருப்பதியைச் சென்றடையும்.

சித்துார், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனுார், மாவேலிக்கரா, காயாங்குளம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும்.

திருப்பதியிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் (எண்:17421), செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவை சந்திப்புக்கு இரவு 10:12 மணிக்கு வந்து, 10:15 மணிக்குப் புறப்படும். கொல்லத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் (எண்:17422), புதன் மற்றும் சனிக்கிழமைகளில், கோவை சந்திப்புக்கு மாலை 6:32 மணிக்கு வந்து 6:35 மணிக்குப் புறப்படும்.

கோவையிலிருந்து திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள், இங்கு புதன், சனிக்கிழமை மாலையில் ரயில் ஏறினால், மறுநாள் அதிகாலையில் திருப்பதிக்குச் செல்ல முடியும் என்பதால், இந்த ரயில் சேவை, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர்களுக்குக் கூடுதல் போக்குவரத்து வசதியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...