கோவை கரடிமடை பகுதியில் நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே வாசலில் நின்ற மூதாட்டியை தந்தத்தால் குத்தி வீசிய காட்டு யானை - சிசிடிவி வெளியீடு

வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை கரடிமடை பகுதியில் வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி நாகம்மாளை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சி நெஞ்சை பதறவைக்கும் வகையில் உள்ளது.



கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், ஆதாரத்தை எடுத்துக் கொண்டு கடந்த அதிகாலை அடர் வனத்தை நோக்கி நடை கட்டும்.

இந்த நிலையிலே, கோடை காலத்துக்கு முன்னதாகவே வறட்சி ஆரம்பமான நிலையில் யானைகள் நீர், உணவுக்காக ஊர் பகுதிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. பத்து நாட்களுக்கு மேலாக ஒற்றைக் காட்டு யானை, மாலை நேரத்தில் ஏழு மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வந்து, எந்தவித அச்சுறுத்தும் இல்லாமல், அனைத்து வீடுகளிலும் உள்ள அரிசி பருப்புகளை சூறையாடுவதும், மாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவைகளை தின்னும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையிலே, நேற்று இரவு கரடிமடை பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்மணிகளை தாக்கி அரிசியை சாப்பிட்டுள்ளது. காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

வனத்துறை தனிப்படை அமைத்து யானையை இடம்பெயர செய்ய வேண்டும் என்ற விவசாயி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழுவினர் கோரிக்கை தெரிவித்தனர். பெண்களை காயப்படுத்திய யானை காட்சி வெளியாகியிருக்கின்றன. வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி நாகம்மாளை யானை குத்தி வீசும் வீடியோ வெளியானது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...