தமிழ் தெம்பு திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா - நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாட்டுப்புற கலைகளை கண்டு மக்கள் ரசிக்கும் விதமாக மாலை 6 மணிக்கு பறையாட்டம், சலங்கை ஆட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில், கரக்காட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.


கோவை: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாட்டு மாட்டு சந்தையும் நடைபெற உள்ளது.



ஆன்மீகமும், அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக 'தமிழ் தெம்பு' என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.



மார்ச் 9-ம் தேதி தொடங்கிய இத்திருவிழாவால் ஈஷா விழா கோலம் பூண்டுள்ளது. ஆதியோகி முன்பு நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்கும் விதமாக மாலை 6 மணிக்கு பறையாட்டம், சலங்கை ஆட்டம், தேவராட்டம், தஞ்சாவூர் தவில், கரக்காட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் சிறப்புகள், பக்திக்கும், கட்டிட கலைக்கும் உதாரணமாக திகழும் தமிழ் கோவில்கள், ராமனுஜரில் தொடங்கி வ.உ.சி, முத்துராமலிங்க தேவர், காமராசர் தொட்டு அப்துல் கலாம் வரை தமிழ் சமூகத்திற்கு பங்காற்றிய பெருந்தலைவர்களின் குறிப்புகள், பக்தியால் தமிழ் வளர்த்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் சிறப்புகள் உட்பட பல்வேறு விஷயங்களை படித்து தெரிந்த கொள்ள உதவும் கண்காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.



இது தவிர, பாரத தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் நாட்டு மாட்டு இனங்களை ஒரே இடத்தில் கண்டு வியக்கும் வகையில், நாட்டு மாட்டு கண்காட்சி, தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து கொள்ள உதவும் சித்த மருத்துவ குடில், ஆரோக்கியமான உணவுகளை உண்டு மகிழ பாரம்பரிய உணவுகளின் அரங்குகள், குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ ராட்டினங்கள், குதிரை சவாரி போன்ற பல்வேறு அம்சங்கள் இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.



அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் விதமாக நாட்டு மாட்டு சந்தை மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாட்டு மாட்டு இனங்களை வாங்கவும் விற்கவும் முடியும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 8428038212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



இதேபோல், தமிழ் தெம்பு என்ற தலைப்பில் பெண்களுக்காக சிறப்பு கோலப்போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு முறையே ரூ.33,000, ரூ.22,000, ரூ.11,000 பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9442510429, 8248128349 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...