காங்கேயம் நெய்க்காரன்பாளையத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் 3618 கடையை காங்கேயம் நகராட்சிக்கு உட்பட 13 வார்டு கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடைபெற்றது. இதை அறிந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளி, கோவில் மற்றும் நீர் ஓடை அருகே மதுக்கடை திறக்கப்படக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இங்கு மதுபான கடை திறந்தால் மாணவ, மாணவியர்களுக்கு மட்டும்மல்லாமல் மது பிரியர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறந்தால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காங்கேயம் நெய்க்காரன்பாளையத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் 3618 கடையை காங்கேயம் நகராட்சிக்கு உட்பட 13 வார்டு கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே திறக்கப்படுவதாகவும், நேற்று இரவு முதல் மதுபாட்டில்கள், மதுபிரியர்கள் வசதிக்கு டேபிள், சேர் ஆகியவைகளை எடுத்து வந்து இன்று டாஸ்மாக் கடை திறப்பு விழா நடைபெற இருந்தது. இதை அறிந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறக்கப்பட இருக்கும் டாஸ்மாக் கடைக்கு அருகில்தனியார் பள்ளி உள்ளதாகவும், மிக அருகிலேயே இந்துக்களின் வழிபாடு தலமான பகவதி அம்மன் திருக்கோயில் உள்ளது, அக்கோவிலின் திருப்பணிகள் நடைபெற்றுவருவதாகவும், அரசு உதவி பெறும் கார்மல் மகளிர் மேல்நிலை பள்ளி உள்ளதாகவும், திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையும், கடைக்கு முன் பகுதியில் வெள்ளத்தாரா ஓடையும் செல்கின்றது. அதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுவது ஒருபுறம் இருந்ததாலும், தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இரவோடு இரவாக டாஸ்மாக் கடையை மாற்றி இன்று திறக்கவேண்டிய அவசியம் என்ன என பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேனேஜரிடம் கேட்ட போது ஏற்கனவே உள்ள கடையை தான் இடமாறுதல் செய்வதாகவும் இதற்கு ஓடையை ஒட்டி வழித்தடம் பயன்படுத்த போவது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே அறிவித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் காங்கேயத்தில் 13 டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாகவும், இதில் ஒன்றில் கூட லைசன்ஸ் இல்லை என்றும், எந்தவொரு தடையும் இல்லாமல் 24 மணி நேரமும் மதுபானங்கள் தாராளமாக கிடைக்கின்றது என்றும், இதை எல்லாம் எந்த ஒரு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பார் நடத்துபவர்களை கேட்டால் நங்கள் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்கின்றோம் நீங்கள் பண்றதை பண்ணுங்கள் என பொதுமக்களிடம் தெரிவிக்கின்றனர்.