விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து வ.உ.சி மதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எந்த நேரத்திலும் இளைஞர்கள் மைதானத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் மைதானத்திற்குள் செல்லும் நான்குவழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி வ.உ.சி. மைதானத்திற்குள் நுழைபவர்களை உடனடியாக கைது செய்ய போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.