பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க நீதிமன்றத்தில் தடையாணை பெற தவறிய தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்


கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து கோவையில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், கேரள அரசு கட்டுமான பணிகளை நடத்தி வருகிறது.

இதனிடையே தேக்குவட்டை பகுதியில் தடுப்பணை கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மஞ்சக்கண்டியிலும் தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு துரிதப்படுத்தியுள்ளது.

கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறத் தவறிய தமிழக அரசை கண்டித்து, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பவானி தடுப்பணை தடுப்பு குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கலந்து கொண்டன. இப்போராட்டத்தில், கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையாக வழக்கு நடத்தி தடையாணை பெற தவறி விட்டதாகவும், கேரள அரசிற்கு சாதகமாக தமிழக அரசு நடந்து கொண்டதால் தொடர்ந்து கேரள அரசு தடுப்பணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பவானி தடுப்பணை விவகாரம் தொடர்பாக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...