தொண்டாமுத்தூரில் சீராக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கபடவில்லை என குற்றஞ்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று தொண்டாமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டோர் 15 பேருந்துகளையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, வறட்சியான சூழ்நிலை மற்றும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் தண்ணீர் விநியோகிக்க போதுமான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திறகு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதி, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...