பாஜக எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் - அமைச்சர் முத்துசாமி

திமுக வெற்றி பெற்றால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும் எனவும் வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் முதல்வரின் கருத்துக்கு எதிர்த்தரப்பினருக்கு பயம் வந்ததாகவும், பயம் இருப்பதால் தான் நம் ஊரையே சுற்றி சுற்றி வருவதாகவும், எத்தனை ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், நாம் தான் 40லும் வெற்றி பெறுவோம் என பிரதமரின் வருகையை சூசகமாக குறிப்பிட்டு அமைச்சர் முத்துசாமி விமர்சித்தார். 

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் ஹால் வளாகத்தில் கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் கல்பனா, கோவை மக்களவை தொகுதி சிபிஎம் எம்.பி., நடராஜன் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது குறித்த கருத்துரை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, அமைச்சர் ராஜா உயரத்திற்கு கோவை மக்களவை தொகுதியின் வெற்றி இருக்கும். வேட்பாளருக்கு வெறுமனே கும்பிடு மட்டும் தான் போடுவார்கள் என நினைத்தேன், ஆனால், கூட்டணி தலைவர்கள் இணைந்து கையை உயர்த்தியது வெற்றியை உறுதி அளித்தது; குழுக்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தால் தான் வெற்றியை தரும், மக்களை தினந்தோறும் சந்தித்து 5 நிமிடங்கள் பார்த்தால் தான் வெற்றியை கொடுக்கும், செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்தார், இன்றும் அவர் கோவையை பற்றி நினைத்து வருவார், இன்றும் அவரது பணியை நாம் செய்ய வேண்டும், வீடு வீடாக தாய்மார்களை சந்திக்க வேண்டும் என்ற பொறுப்பு உள்ளது, அந்த வாக்கு நமக்கு கிடைக்காது என்றால் 5 முறையாவது மீண்டும் மீண்டும் சென்று திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை உருவாக்க வேண்டும். 

பாஜக வேட்பாளர் அண்ணாமலை என்று அறிவித்துள்ளார்கள், திமுக உட்பட கூட்டணி தொண்டர்கள் மீறி எதையும் செய்ய முடியாது என என்னால் நிச்சயமாக உணர முடிகிறது; 12 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வருகிற 12ம் தேதி முதல்வர் கூட்டம் கோவையில் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் சட்டமன்றத்தில் நாம் தவற விட்டிருக்கலாம். ஆனால், முதல் நிகழ்ச்சி என்பது வாக்களிக்காதவர்கள் என யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு நான் உழைக்க நினைக்கிறேன் என கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் முதல் கூட்டத்தை கோவையில் முதல்வர் நடத்தினார்.

திமுக வெற்றி பெற்றால் தான், மத்தியில் நமக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற முடியும். எல்லாரும் அவர்களுக்கானது கோவை மண்டலம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் திமுகவிற்கு முதல் வெற்றி கோவையிலிருந்து வர முடியும் என நம்புகிறேன் என்றார். 

முன்னதாக பேசிய கோவை எம். பி., நடராஜன், 10 நாட்களாக பிரதமர் கண்ணில் தேர்தல் தோல்வி பயம் தெரிகிறது. முதல்வர் கூருந்து கவனியுங்கள், நமக்கு தான் தேர்தல் ஆணையம், பிரதமர் இராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறார். தவறுகளை பகிரங்கமாக செய்ய துவங்கியுள்ளார். தேர்தல் அச்சம் பயம் கண்ணில் தெரிகிறது. தினமும் ஆட்டோவில் ஏறி போவது போன்று ஹெலிகாப்டரில் செல்கிறார். பாஜக கோவை மக்களவை தொகுதியில் 2004 க்கும் பிறகு பாஜக வெளியே நிற்கிறார். மக்கள் பாடம் புகுட்டியுள்ளனர். மறக்க முடியாத பாடத்தை பிரதமருக்கு தமிழக, கோவை மக்கள் சொல்லி கொடுக்க வேண்டும். மதவெறி சக்திக்கு எந்தவித உத்தரவாதம் வாய்ப்பில்லை என்பதை பாஜகவிற்கு புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...