மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோவை மணிகூண்டு பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த போலிசார் மாணவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால், கைதாக மறுத்த மாணவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'டெல்லியில் 17வது நாளாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் தற்போது சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறோம். ஹைட்ரோகார்பன் திட்ட்ச்த்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் இருந்தும் அதை கையெழுத்திட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, உடனடியாக அந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் தொடர்ந்து எங்கள் போராட்டம் நடைபெறும்'என்றார்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.