பாரத் அரிசி போல பாரத் தேங்காய் எண்ணெய்..! - பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்

பொள்ளாச்சி பாஜக சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்னும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, வேட்பாளர் வசந்தராஜன், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உறுதியளித்தார்.


கோவை: பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் "நிற்க வைத்து சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" எனும் தென்னை விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடைபெற்றது.



நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் கலந்து கொண்டார்.



கூட்டத்தில், பங்கேற்ற தென்னை விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் மேம்பட பாஜக வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.



அதைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் கலந்துரையாடிய வசந்தராஜன், பொள்ளாச்சி தென்னை விவசாயத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது, எங்களது பிரதான வாக்குறுதியாக விவசாயிகளின் வாழ்வாரத்தை மேம்பட வைப்பது தான். தற்போது தென்னை மரங்களை தாக்கி வரும் நோய் தாக்குதல், தண்ணீர் பிரச்சினை தேங்காய்க்கு உரிய விலை இல்லாதது, விவசாயிகள் கண்ணீர்சிந்தும் நிலைக்கு காரணமாக உள்ளது. எனவே, விவசாயிகளுடன் ஒருவனாக இருந்து அவர்களின் சிரமங்களை கேட்டறிந்து, மத்திய அரசு மூலமாக தீர்வு பெற்று தருவதே தனது குறிக்கோள் என்றார்.

ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் ஜெயித்த பின் விவசாயிகள் குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதால் தான் "நிக்க வச்சு சொல்லுங்க என்ன வேணும் கேளுங்க" என்பதை முன்னிறுத்தி எனது பிரச்சாரத்தை விவசாயிகளிடமிருந்து தொடங்குகிறேன், என்றார்.

மேலும், கயிறு தொழிற்சாலைகள் மேம்பாடு, ஆனைமலை நல்லாறு திட்டம், தேங்காய் எண்ணெயை பாரத் அரிசி என்பது போல் பாரத் தேங்காய் எண்ணெய் விற்பனையை கொண்டு வந்து தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன் என்று வாக்களித்தார்.

தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், தன்னை கேள்வி கேட்க அனைத்து உரிமையும் விவசாயிகளுக்கு உள்ளது என்று கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...