தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்று தருவேன் - செயல்வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை.

கோரிக்கைகளை மத்திய அரசிடம் சண்டையிட்டு பெற்றுத் தர, வலிமையான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.



திருப்பூர்: ஆனைமலை நல்லாறுதிட்டம் , தென்னை விவசாயிகளின் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் சண்டையிட்டு பெற்றுத் தர, வலிமையான வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசினார். 



மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, நானே களத்தில் இறக்கப்பட்டு இருக்கிறேன். 400 எம்பி சீட்டுகளை நாம் வெல்ல வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்குவதற்கு அல்ல, இந்தியாவின் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக தான். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என தெரியும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இது. 

ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த இங்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற வேட்பாளர் குரல் கொடுக்க வேண்டும் .10 ஆயிரம் கோடி வேண்டும் என்றால் அதனை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெரும் வேட்பாளராக இருக்க வேண்டும். அப்படி எந்த வேட்பாளரால் பெற்று தர முடியும் என்பதை யோசித்து பாருங்கள்,

கோவையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கி விட்டது. உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலேகொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை. குறைந்த பட்சம் நான் சொல்ல கூடியதை கேட்டு அதன் பிறகு அழுத்தம் கொடுத்து செய்ய வேண்டியதை செய்ய வைப்பது என் கடமை,.



வட அமெரிக்காவில் மக்கா சோளம் விலை குறைவு ஏற்பட்டுள்ளதால், அங்கிருந்து இறக்குமதி செய்யவரியை குறைத்தால் விலை குறைவாகும், இதையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு நபர் வேண்டும். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்தால் இன்னும் குறைவாகவே கிடைக்கும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க ஒருவர் தேவை .விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது.

கரூர் - கோவை 6 வழிச்சாலை கொண்டு வர வேண்டும். கேஸ் என்பது பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் பாஜக எம்.பிக்கள் இல்லாததால் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை, ஆனால்,பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வி கேட்பதில்லை. தற்போதுள்ள எம்.பியை யாருமே பார்த்ததில்லை . ஆனால் அண்ணாமலையை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்துள்ளிர்கள். அரசியலில் நான் விடுமுறை எடுத்ததேஇல்லை. என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன் . இப்போது மாற்றம் இல்லை என்றால் எப்போதும் இல்லை. என்பதற்காக உழைத்துகொன்டிருக்கிறேன்.

அமைச்சர் TRB ராஜா பணத்தோடு களத்தில் நிற்கிறார். இது உங்களுடைய தேர்தல், 18 நாளில் நடைபெறவுள்ள தேர்தல், 19 பேர் பாஜகவில் போட்டியிடுகிறார்கள். 40 தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் என்னைசந்திக்கவில்லை என எதிர் பார்க்காமல், நீங்களே அண்ணமலையாக, மோடியாகஎண்ணி பிரசாரம் செய்யுங்கள். 

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நான் பார்த்து கொள்கிறேன். இன்னும் 5 ஆண்டுகள் உங்கள் சேவகனாக பணி செய்ய, 25 நாட்கள் எங்களுக்காக நீங்கள் பணி செய்யுங்கள். தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சண்டையிட்டு பெற்று தருவேன். கோவைக்கு வேலையை செய்து கொடுப்பதற்கு வலிமையான மக்கள் பிரதிநிதி தேவை.

தென்னை விவசாயிகளின் கோரிக்கை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும், வேலம்பட்டி சுங்கச்சாவடி அகற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்.

கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் நல்லவர்கள் பேச துவங்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு எதனால் வர வேன்டும் என பேச வேண்டும். உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் இருப்பேன். 

டெக்ஸ்டைல் தொழில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாய் இருக்கிறோம், என்று அண்ணாமலை பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் திருப்பூர் பகுதி சேர்ந்த மாற்று கட்சியினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...