கோவையில் பொது பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்.!

கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களான Dr.வினோத் ஆர் ராவ் (கோவை), அனுராக் சவுத்ரி (பொள்ளாச்சி), காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


கோவை: வரும் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற த் தேர்தல் தேர்தலை முன்னிட்டு, கோவையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு, கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர்களான வினோத் ஆர் ராவ் (கோவை), அனுராக் சவுத்ரி (பொள்ளாச்சி), காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமைதாங்கினர்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தின்குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கவனித்தல், விதிகள் மீறப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுத்தல், தேர்தல் கண்காணிப்பு மற்றும் பறக்கும் படை அலுவலர்களின் செயல்பாடு, சிவிஜில் ஆப் புகார் பதிவு, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிவகுப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு நடவடிக்கை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விபரம் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வாக்குகள் எண்ணப்படும் நாளன்று,தபால் வாக்குப் பதிவினை செயல்படுத்துதல், கண்காணித்தல் வாக்கு பதிவு மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள், குறித்து கோவை மற்றும்.பொள்ளாச்சியின் பொது பார்வையாளர்களான, வினோத் ஆர்.ராவ், அனுராக் சவுத்ரி, காவல் பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...