கமா இல்லை, புள்ளி இல்லை என்று ஏதேதோ காரணத்தை காட்டி எனது வேட்பு மனுவை நிராகரிக்க டிராமா செய்தார்கள் - அண்ணாமலை

களத்தில் எதிர்க்க முடியாத எதிர்கட்சிகள், எனது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது என்று அண்ணாமலை விமர்சித்தார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். 

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், அவரது வேட்பு மனுவை நிராகரிக்க, எதிர்க்கட்சிகள் பல்வேறுடிராமாக்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்பதால், வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள்.எங்கள் தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம். சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 குறித்து (India Court fee, Indian non judicial), வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுதே ஒரு குழப்பம் இருந்தது எனவே,ஒன்றை நிராகரித்தால் மற்றொன்று ஏற்றுக்கொள்வார்கள் என்று இரண்டையும் கொடுத்திருந்தோம். 

அதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு வேட்பு மனுவை நிராகரித்து மற்றொன்று ஏற்றுள்ளார்கள்.இது ஒரு பெரிய விஷயம் அல்ல. இது அனைத்து தேர்தல்களிலும் நடக்கும் ஒன்றுதான். வேட்புமனு பரிசீலனை செய்யும்பொழுது ஒரு அரசியல் கட்சி இவ்வாறு செய்யும் இந்த முறை, கோவையில் உச்சபட்சமாக நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்லி தேர்தல் நடத்தும் அதிகாரிகளே விளக்கம் தர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

எங்களைப் பொறுத்தவரை சீரியல் நம்பர் 15 மற்றும் 27 ஆகிய இரண்டையும் தாக்கல் செய்துள்ளோம் இன்று நம்முடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கமா இல்லை, புள்ளி இல்லை என்று சொன்னால் கூட நிராகரிக்க வேண்டிய காரணம் அது கிடையாது. என்ன சந்தேகம் இருந்தாலும்,தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி எழுப்பலாம். 

களத்தில் எதிர்க்க முடியாத எதிர்கட்சிகள், எனது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது, என்றார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...