முதலமைச்சரின் திட்டங்களை நம்பித்தான் வேட்பாளர்கள் நிறுத்தம் - கோவையில் கனிமொழி எம்பி பேட்டி

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்பி பதிலளித்தார்.


கோவை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெளிவாக தெரிகிறது எனவும், இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனியில் இருக்கும் இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் உருவாக வேண்டும், பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார். நிச்சயமாக இந்த கூட்டணி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில் போட்டியிடும் 40 இடங்களிலும் தெள்ள தெளிவாக இருக்கிறது என குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு தெரியாது என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது என்றும் சுட்டி காட்டினார்.

இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது என்ற அதை எவ்வாறு சொல்வது என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.



குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் 60 வாங்கலாம் 90% கூட வாங்கலாம் 100 சதவீதம் என கனவு காண்பது அவரது உரிமை. ஆனால் வெற்றி பெறுவது நிச்சயமாக நாங்கள்தான் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார்.

பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது, முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...