கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை என்றும், இதற்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி வாய்க்கால் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டலத்தில் 2வது சுற்று பாயக்கூடிய பிஏபி வாய்க்காலில் பாசன தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைமடைக்கு தற்போது வரை தண்ணீர் வந்து சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் காங்கேயம் சென்னிமலை சாலையில் 6.09 கிலோ மீட்டரில் அமைந்துள்ள கடைமடைக்கு உரிய தண்ணீர் வரவில்லை.



எனவே இரண்டாவது சுற்றில் பாயக்கூடிய முதல் 4 ஆயிரம் பரப்பளவு ஏக்கர் பாசன விவசாய பூமி தற்போது வறட்சியை கண்டுள்ளது. எனவே விவசாயிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மேற்பார்வையிட்ட அதிகாரிகள் முறையான பதிலும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தற்போது பிஏபி விவசாயிகள் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்‌ கூறியதாவது, முதல் மண்டலம் இரண்டாம் சுற்றில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசனம் வசதி பெற வேண்டும். ஆனால் கடைமடையான சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை சென்று அடையவில்லை. இதற்கான முறையான பதிலும் அதிகாரிகள் அளிக்கவில்லை. எனவே நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். மேலும் உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் காங்கேயம் காவல் நிலையம் சென்று இந்த அபரிமிதமான தண்ணீர் திருட்டை தடுக்கவும், இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஏபி விவசாயிகள் சார்பில் புகார் அளிக்க உள்ளோம். மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தற்போது வரை சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.‌ மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை கேட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

Newsletter

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...