இந்தியாவில் வரும் ஒரு சில வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தற்போது, இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா என்னும் நகரத்திலேயே அதிகப்படியாக 44.1 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

முன்னதாகவே தென்னிந்தியாவில் அதிகப்படியாக கோவையில் கடந்த 10 நாட்களாக வெப்பம் சுட்டறித்து வருகிறது. கோவையில் வெள்ளூருக்கு இணையாக 37 டிகிரி செல்சியஸ், மதுரை 29 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி 24 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 33 டிகிரி செல்சியஸ் என வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் தற்போது கோவையில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கார்த்திக் என்னும் விற்பனை பிரதிநிதி கூறுகையில், கோவையில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாலை 5 மணியளவில் கூட வெயில் சுட்டறிகிறது. இவ்வருடம் கோவையில் நிலவி வரும் வெயில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது' என்றார்.
இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர் ராம் பிரசாத் கூறுகையில், கோவையில் தற்போது நிலவி வரும் வெப்பம் சென்னையை நினைவுபடுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே கோவையில் இவ்வாறு தட்ப வெப்ப நிலை மாற்றம் அடைந்துள்ளது. சாலை போக்குவரத்தின்போது சிகனல்களில் நிறுத்தத்திற்கான நேரத்தினை குறைத்தால் மக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.
சண்முகசுந்திரம் என்னும் முதியவர் கூறுகையில், இதுபோன்ற வெயில் சுட்டறிகும் காலங்களில் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர செல்லும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்து போகிறது.