கோவையில் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் வரும் ஒரு சில வாரங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், தற்போது, இந்தியாவிலேயே மஹாராஷ்டிராவில் உள்ள அகோலா என்னும் நகரத்திலேயே அதிகப்படியாக 44.1 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருவதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு சில நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.


முன்னதாகவே தென்னிந்தியாவில் அதிகப்படியாக கோவையில் கடந்த 10 நாட்களாக  வெப்பம் சுட்டறித்து வருகிறது. கோவையில் வெள்ளூருக்கு இணையாக 37 டிகிரி செல்சியஸ், மதுரை 29 டிகிரி செல்சியஸ், திருநெல்வேலி 24 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 33 டிகிரி செல்சியஸ் என வெப்பம் நிலவி வருகிறது. ஆனால் தற்போது கோவையில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கார்த்திக் என்னும் விற்பனை பிரதிநிதி கூறுகையில், கோவையில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மாலை 5 மணியளவில் கூட வெயில் சுட்டறிகிறது. இவ்வருடம் கோவையில் நிலவி வரும் வெயில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது' என்றார்.

இதுகுறித்து, தனியார் நிறுவன ஊழியர் ராம் பிரசாத் கூறுகையில், கோவையில் தற்போது நிலவி வரும் வெப்பம் சென்னையை நினைவுபடுத்துகிறது. கடந்த சில வருடங்களாகவே கோவையில் இவ்வாறு தட்ப வெப்ப நிலை மாற்றம் அடைந்துள்ளது. சாலை போக்குவரத்தின்போது சிகனல்களில் நிறுத்தத்திற்கான நேரத்தினை குறைத்தால் மக்கள் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்' என தெரிவித்தார்.

சண்முகசுந்திரம் என்னும் முதியவர் கூறுகையில், இதுபோன்ற வெயில் சுட்டறிகும் காலங்களில் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர செல்லும்  பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவையில் தொடர்ந்து வெயில் அதிகரிக்கிறது, மழை பொய்த்து போகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...