முன்பு எப்போதுமிராத அளவுக்கு இந்திய ரயில்வேயில் பயணியர் மற்றும் ரயில் உபயோகிப்போரின் குறைகள் தீர்ப்பதில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு திறனாய்வுக்கூட்டங்களில் இதன் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்தி வருகின்றனர்.
அத்தகு கூட்டங்களில் சமூக வலைத்தளங்கள் உட்பட்ட அனைத்து குறைதெரிவிப்பு முனையங்களிலும் தெரிவிக்கப்படும் குறைகளும், அவைகள் தீர்க்கப்பட எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசங்களும் சீராய்வு செய்யப்படுகின்றன.
இந்திய ரயில்வே இவ்வாறு பெறப்பட்ட 90 சதவீத குறைகளை இது வரை தீர்த்து வந்துள்ளது.
சமீபத்தில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு இது குறித்த ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிப்பிதில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களை விட விரைவாக, (திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்கள்) அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, இவ்வாறு திறமையாக செயல்பட்டு பயணிகள் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.