கச்சத் தீவு விவகாரத்தில் பா.ஜ.க விற்கு அறிவுரை வழங்க காங்கிரஸ் கட்சிக்கு எந்த தகுதியும் கிடையாது- கோவையில் அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் அண்ணாமலை நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். நாளை தேனியில் அ.மு.மு.க தலைவர் டி.டி.வி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை பா.ஜ.க வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார்.

அடுத்த நாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்று, பின்னர் கேரளா செல்கிறார். பிரதமர் தமிழகம் வருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உறுதியான தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உரிய காலத்தில் முன் கூட்டியே கட்சி சின்னத்திற்காக விண்ணப்பம் அளிக்காமல் இருந்ததனால் சின்னம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இதனை மறைப்பதற்காக என் மீதும் பா.ஜ.க மீதும் குற்றம் சாட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தால் கட்சிக்கான சின்னத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என சீமான் கூறி உள்ளார். அதே நேரத்தில் தான் ஜி.கே.வாசன், டி.டி.வி தினகரன் ஆகியோரும் விண்ணப்பித்து சின்னத்தை பெற்று உள்ளனர் என சுட்டிக் காட்டினார்.



தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என விமர்சித்தவர், முதல்வர் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் போது தான் தி.மு.க அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி குறித்து முதல்வர் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார். மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொள்வது போல் ரோட் ஷோ எனப்படும் வாகன பேரணியை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏன் அதை செய்வதில்லை என கேள்வி எழுப்பினார். பத்தாண்டு கால பிரதமர் ஆட்சியையும் தி.மு.க அரசின் ஆட்சியும் ஒப்பிட்டு பொதுமக்கள் இந்த தேர்தலில் உரிய தீர்ப்பினை வழங்குவார்கள் என அண்ணாமலை கூறினார்.



தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி தான் வருமான வரித்துறை இயங்கும். அந்த வகையில் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தான் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என கூறினார். தி.மு.க இந்து மதத்தை ஆதரிப்பதாக தற்போது பொய் வேஷம் போடுகிறது. தேர்தல் சமயத்தில் ஆதரிப்பதும் அதற்கு பிறகு எதிர்ப்பதும் என நடந்து கொள்வது தான் தி.மு.க வின் இயல்பு எனவும் அண்ணாமலை கூறினார்.

கச்சத் தீவு விவகாரத்தை பொருத்தவரை அது குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்று பா.ஜ.க மக்கள் முன்பு வைத்து உள்ளது. மக்கள் இப்போது அதைப் பற்றி தெரிந்து கொண்டு உள்ளனர். எங்களது ஜனநாய கடமையை நாங்கள் செய்து உள்ளோம். மக்கள் அதற்கு ஆதரவளித்து உள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கொச்சையாக பேசிக் கொள்வதில் வாரிசுகளுக்கு இடையே போட்டி உள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகமாக கொச்சையாக பேசுபவராக உதயநிதி இருக்கிறார். 29 பைசா மோடி என அவர் மீண்டும் கூறினால், அவரை பீர், டாஸ்மாக், சாராயம், ட்ரக் உதயநிதி என எங்களின் தொண்டர்கள் கூறுவார்கள். மரியாதையை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என காட்டமாக அண்ணாமலை தெரிவித்தார்.

கச்சத் தீவு விவகாரத்தை தேர்தலுக்காக பா.ஜ.க பயன்படுத்துகிறது என்றால் வெள்ள நிவாரண நிதி குறித்தும் தி.மு.க தேர்தலுக்காக கையில் எடுத்து உள்ளது என்று தான் பார்க்க வேண்டும். பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்  தலைமையில் தமிழக பா.ஜ.க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  கச்சத் தீவை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்த கோரிக்கையை வைத்து உள்ளோம். அவர் அதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து வருவதாக கூறி உள்ளார் என கூறினார். 

கோவையில் தி.மு.க வினர் பணம் வாங்கிவிட்டு ஓட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையத்தின் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் என கூறியவர், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை,கச்சத் தீவு விவகாரத்தை பொறுப்பில்லாமல் கையாண்ட காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாக கையாள வேண்டும் என பா.ஜ.க விற்கு அறிவுரை வழங்க எந்த தகுதியும் கிடையாது. கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதை வெளிக் கொண்டு வந்து மக்கள் முன் வைத்து உள்ளோம். ஆர்டிகிள் 6 திரும்ப செயல்படுத்த வேண்டும் அல்லது கட்சதீவினை மீண்டும் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் முடிவு என தெரிவித்தார். தி.மு.க அ.தி.மு.க வினரின் ஆட்டு பிரியாணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பணக்காரராக பிறந்தவர். எந்த உழைப்பும் செய்யாதவர். அதனால் அவர்கள் அப்படித் தான் பேசுவார்கள் எனவும், தனி மனித தாக்குதலில் தான் இன்றைக்கு கோயம்புத்தூரின் அரசியல் சென்று கொண்டு இருக்கிறது எனவும் கூறினார்.  

மேலும் பேசியவர், பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி அவர்களும் தானும் அக்கா தம்பி எப்படி இயல்பாக இருப்பார்களோ அப்படித் தான் இருப்பதாகவும், எங்களுக்கு நடிக்க தெரியாது எனவும், அதை வைத்து தான் ட்ரோல் செய்து வருகின்றனர் எனவும் கூறினார். கச்சத் தீவு விவகாரத்தை தற்போது பேசி வருவதால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து சரியாகவே பேசி உள்ளனர் என கூறியவர், கொங்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி கட்டாயம் வெற்றி பெறும் எனவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க விற்கும் மாநிலத்தை ஆளும் தி.மு.க விற்கும் தான் போட்டி என்பதை நீண்ட காலமாக தான் கூறி வருவதாகவும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க அரசியலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என கூறியவர், இந்திப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை தி.மு.க வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க அந்த ஆவணங்களை கட்டாயம் வெளியிடும். அவர்களின் பெயரை பயன்படுத்தி தி.மு.க தான் அரசியல் செய்து வருகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதை தி.மு.க வினர் ஏற்றுக்கொள்வாரா எனவும் கேள்வி எழுப்பினார். உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க வேட்பாளர்கள் ஹிந்தியில் போஸ்டர் அடித்தும், ஹிந்தியில் பிரச்சாரமும் செய்து உள்ளனர். தி.மு.க வினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது எனவும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...