கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தகவல்

இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் அதிகளவு வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் மேலும் பற்றாக்குறை என கண்டறியும் பகுதிகளில் லாரிகள் மூலமாகவும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அளவில் அந்தந்த பகுதிகளில் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதி வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்குவதன் விவரம் குறித்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் தேவையினை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 18005996000 பொருத்தப்பட்டுள்ளது.

இதில் புகார்கள் குறித்து தெரிவிப்பவர்களுக்கு உடனடியாக அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் சிலர் பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்பி சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களை தூண்டி வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் யாரும் துணைபோக வேண்டாம். தாங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்றால் தங்கள் பகுதியில் உள்ள சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று தகவல் தெரிவித்தோ அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் நகராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரின் அறிவுரைப்படி குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தேவையான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுபோன்ற நிலையில் யாரேனும் சாலை மறியல் போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்கள் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...