தமிழ்நாட்டில் பருவ மழை குறைவினால் தற்போது கடும் வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது. அதே போல் கோவை மாவட்டத்திலும் கடுமையான வறட்சியும் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வருவதுடன் அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.
எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, பவானி ஆற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வரும் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தண்ணீர் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பினை மீறி அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் விவசாயிகளின் மின் மோட்டார் இணைப்புகள் துண்டிக்கப்படும். மின் மோட்டார்கள் கைப்பற்றப்படும். பாதை வரி அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், அபராதம் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும்.
எனவே, பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் இனிமேல் தண்ணீர் எடுப்பதை தவிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.