எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 1லட்சத்து 57 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் இன்று ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அந்த வழியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த வரப்பாளையம் கிராமம் ராஜா என்பவரது மகன் அஜித் குமார் ஓட்டி வந்த எலக்ட்ரிக் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சீட்டின் அடியில் ஆவணம் இன்றி மறைத்து வைத்திருந்த 1லட்சத்து 57ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தோட்ட கலைத்துறை உதவி இயக்குனருமான சசிகலா மற்றும் போலீசார் ஆசைத்தம்பி, துர்காதேவி ஆகிய பறக்கும் படை குழுவினர் ஆவணம் இன்றி அஜித்குமார் (வயது 24)எடுத்து வந்த ரொக்க பணத்தினை கைப்பற்றி தாராபுரம் கோட்டாட்சியர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அவர் கைப்பற்றப்பட்ட பணத்தை தாராபுரம் அரசு கருவூலத்தில் வைத்துள்ளார்.
மேலும் உரிய ஆவணங்களை காட்டி அஜித்குமார் பணத்தை எடுத்துச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போலீஸ் சார் அஜீத் குமார் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.