தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய வங்கிக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பாக காய்கறிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் வலியுறுத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொணடனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...