தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 2024 மாதத்திற்கான பயிற்சி, 08.04.2024 திங்கட்கிழமை அன்று அளிக்கப்படும்.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
* தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்
* பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம்
* தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம்
* தேனைப் பிரித்தெடுத்தல்
* தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம்
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை.
மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் தொலைபேசி: 0422-6611214, மின்னஞ்சல்: [email protected] ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.