நானும் ஆட்டிசம் குறைபாட்டில் பாதிக்கப்பட்டவன் தான் - கோவையில் தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

உலக ஆடிசம் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. இதில், தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்று பொதுமக்களுடன் நடனமாடினார்.


கோவை: கோவை ரேஸ் கோர்ஸில் உலக ஆடிசம் தினத்தை முன்னிட்டு 1000"க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்த வாக்கத்தானை முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைந்து தொடங்கி வைத்தார்.



அதற்கு முன்னதாக மேடையில் பொதுமக்களுடன் வைபாக நடனமாடினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்டிசம் குறித்து பெற்றோர்களுக்கு எந்த விதமான விழிப்புணர்வு இல்லை என்றும், ஆட்டிசம் என்பது மன இறுக்க நோய் மனவளர்ச்சி அடையாமல் இருப்பது என்றும், அதற்காக பயிற்சி கொடுப்பதற்காக மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்தியாவில் 68 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடுகள் உள்ளது என்றும், மேலும் அண்டை நாடுகளான அமெரிக்காவில் 38 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் எந்த விதமான நம்பிக்கை இழக்கக்கூடாது உறுதியாக இருந்து பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகளவில் பெரிய பெரிய அறிவியல் அறிஞர்கள் கூட ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய சாதனைகயாளர்கள் கூட ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்றும், பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசமால் பாதிக்கப்பட்டுள்ளார். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு நாள் ரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் போது பயணச்சீட்டை தவறவிட்டு தீவிரமாக தேடி வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் நீங்கள் ஒரு அறிவாளி உங்களுக்கு டிக்கெட் தேவையில்லை என்றும், நீங்கள் போகலாம் என்று கூறினர்.

அதையும் மீறி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விடாமல் டிக்கெட்டை தேடி வந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகரிடம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது நான் எங்கு இறங்குவேன் என்று தெரியாது, அதற்காக தான் டிக்கெட்டை தேடி உள்ளதாக கூறினார். இது போல பெரிய விஞ்ஞானிகள் கூட ஆட்டிசத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நானும் ஆட்டிசம் குறைபாடுகளில் பாதிக்கப்பட்டவன் தான். அதில் உள்ள இன்னல்களைக் கடந்து தற்போது சாதித்துள்ளேன் என தெரிவித்தார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...