ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை,அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல் இது - கோவையில் சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத்..!

கோவை ராஜ வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத், இந்திய கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற  வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.



கோவை: இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிரகாஷ் காரத், கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் கே. ஈஸ்வர சாமியை ஆதரித்து சிபிஎம் ஒருங்கிணைத்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

கோவை ராஜ வீதியில் உள்ள தேர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் பேசிய சிபிஎம் தலைவர் பிரகாஷ் காரத், 

தேர்தல் அறிவித்த பின், இரண்டு மாநில முதல்வர்கள் -டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த்வரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை எப்போதும் இப்படி நடந்ததில்லை.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக, மதச்சார்பின்மை பாதுகாப்பதற்காக, அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல் என்று கருதுகிறேன்.

இந்தியா கூட்டணியின் கட்சிகள் இரண்டு முக்கியமான இலக்குகளை நிர்ணயத்துள்ளனர். ஒன்று, இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக தொடர வேண்டும். இரண்டு, இந்த நாடு ஒரு மதச்சார்பின்மை மதச்சார்பற்ற நாடாக தொடர வேண்டும். இவை, இரண்டுமே அரசியல் சாசனத்தின் மிக முக்கியமான அம்சங்கள்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்த நாட்டை ஒரு இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று துடிக்கின்றது. மோடியின் பாரதிய ஜனதா கட்சி, மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக இல்லை. எனவே,இவர்கள் ஆட்சி நடத்தக்கூடிய மாநிலங்களில் மதச்சார்பின்மைக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகின்றனர்.குடியுரிமைச் சட்டம் என்ற சட்டத்தை கொண்டு வந்து மத அடிப்படையில் மக்களை பிரிப்பதற்கான முயற்சியை செய்கிறார்கள்.



பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களான உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய - கிறிஸ்தவ சிறுபான்மையினர் இரண்டாம் தர பிரதியாக நடத்தப்படுகின்றனர். 

அவர்களுடைய வாழ்வுரிமைகளை பறிப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும், 

குஜராத்தை ஒரு முன்மாதிரியாகவும், உத்தர பிரதேசத்தை ஒரு முன்மாதிரியாகவும் வைத்து இதேபோன்று இந்தியாவை மாற்றுவோம் என்று சொல்கிறார்கள். 

நமது அரசியல் சாசனம் மதங்களுக்கு அப்பாற்பட்டது, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டது, இனங்களுக்கு அப்பாற்பட்டது, ஆனால், இதனை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்வதாக இல்லை.

மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிரிப்பதற்காக முயற்சி செய்யக் கூடிய அதே நேரத்தில், இந்திய நாட்டின் பொது பெரு முதலாளிகளை வளர்ப்பதற்கான திட்டங்களை பாரதிய ஜனதா கட்சி அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் நூற்றுக்கு நூறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அதானி, அம்பானி போன்றவர்களை தான் மக்களுக்கு பரவலாக தெரியும்.ஆனால், இன்னும் ஐந்து, ஆறு மிகப்பெரிய பணக்காரர்களை இந்த பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சி என்பது வளர்த்துக் கொண்டு இருக்கிறது. இதனால், ஏற்றத்தாழ்வு என்பது மிகவும் அதிகரித்துள்ளது. 



நாட்டில் வேலையின்மை, விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது.விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசனுடைய மிகப்பெரிய தோல்வியாக பார்க்கின்றோம். திண்டாட்டம் என்று ஒரு உச்ச கட்டத்தை எட்டி இருக்கின்றது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. 

இளைஞர்களுக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கொடுக்க கூடிய நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படவில்லை. 

இந்த நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்கான எந்த ஒரு திட்டமும் அமல்படுத்தவில்லை. கடந்த முறையைப் போல, இந்த முறையும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக கொடுக்க வேண்டும். இந்த தேர்தலில் பாஜகவின் மாநில தலைவர் கோவையில் போட்டியிடுவதால், அக்கட்சி இங்கு வெற்றி பெற்று விடலாம் என பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது.

வரும் 19ஆம் தேதி நீங்கள் அளிக்கப் போகும் வாக்குகள் அவர்களது கனவுகளை பொய்யாக்கும் என்று நம்புகிறேன். இந்தியா கூட்டணி சார்பில் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன், என்று இவ்வாறு பேசினார். 

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...