தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை - பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து இன்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோட்டில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், அதிமுகவை உடைக்க நினைத்த மு.க.ஸ்டாலின் கனவு உடைக்கப்பட்டது. தேர்தல் என்ற போரில் எதிரிகளை விரட்டி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி இது யாராலும் எதுவும் செய்ய முடியாது.



ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு கேரளா இரு மாநில அரசுகள் பேசி தீர்க்கும் திட்டம். இது எப்படி மத்திய அரசு தலையிட முடியும். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரே மேடையில் நின்று மு.க.ஸ்டாலின் பேச தயாரா என்று தேர்தல் பரப்பரை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேட்டி கொடுத்து மக்களை ஈர்த்து வாக்குளை பெற முயற்சி செய்வதாக அண்ணாமலை மீது அவர் மறைமுகமாக சாடினார்.



இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி, மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...