உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்த செந்தில்குமாரி என்ற பெண் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் நேற்று உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது.



அத்துடன் துக்க வீட்டு முன்னாள் நின்றிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய செந்தில்குமாரி (வயது 48) என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்த ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். உடுமலை அருகே துக்க வீட்டில் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...