கோவை செல்லும் ரயில்கள் போத்தனூருடன் நிறுத்தம்;  மெமு ரயில் சேவை 2 நாட்கள் நிறுத்தம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக, மதுரை, கண்ணூா், ஷோரனூரில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். அதே போல 13, 14 தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் மெமு இரயில் சேவை நிறுத்தப்படும்  என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை:சேலம் ரயில்வே கோட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், கோவை செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன் படி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும். 

மறுமாா்க்கமாக,மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 12.55 மணிக்கு புறப்படும் மெமு ரயில் ஏப்.13 - ஆம் தேதியும், காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.14 - ஆம் தேதியும் ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், எா்ணாகுளம் - பெங்களூா் இன்டா்சிட்டி அதிவிரைவு ரயில், பாலக்காடு - ஈரோடு விரைவு ரயில் ஏப்.13 - ஆம் தேதி கோவை வழியாக செல்வதற்கு பதிலாக போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

கோவை - மதுரை, கோவை - கண்ணூா் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஏப்.13 - ஆம் தேதி போத்தனூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக, இந்த ரயில்கள் போத்தனூரில் இருந்து புறப்பட்டு மதுரை, கண்ணூா் சென்றடையும்.

இதுபோல், ஷோரனூா் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஏப்.13, 14 ஆகிய தேதிகளில் கோவை செல்வதற்கு பதிலாக போத்தனூருடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...