அரிசிக்கு ஜிஎஸ்டி போட்டவர் மோடி அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி - வெள்ளகோவிலில் திமுக வேட்பாளர் பிரகாஷ் புகார்

எதிரியாக இருக்கலாம், ஆனால் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் வெள்ளகோவில் நகர திமுக செயலாளர் சபரி முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் கூறுகையில், அரிசிக்கு ஜிஎஸ்டி வரி போட்டவர் மோடி. அதற்கு உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதா இருக்கும்போது கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டார். மோடியா லேடியா உன்னை ஒரு கை பார்க்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா இறந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திற்கும் கையெழுத்து போட்டு விட்டார். எதிரியாக இருக்கலாம் துரோகியாக இருக்கக் கூடாது. தற்போது அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் துரோகிகள். மேலும் அறிவொளி நகர் பகுதியில் பேருந்து நிற்காமல் செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் நீங்கள் அதிமுக கவுன்சிலரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அது நான் தவறு என சொல்லவில்லை அவர் சொன்னால்தான் நிறுத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் ஒன்றிணைந்து மனுவாக எழுதி எங்களது மாவட்டச் செயலாளரிடம் கொடுங்கள் பேருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...