தேர்தல் விழிப்புணர்வு குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறுந்தகடு வெளியீடு

எங்கெங்கெல்லாம் 60 சதவீதத்திற்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு குறித்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.



இதனை கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியர் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பெற்று கொண்டனர்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எங்கெங்கெல்லாம் 60% க்கும் கீழ் வாக்குப்பதிவானதோ, அங்கு அழைப்புதல் தருவது, உறுதிமொழி எடுக்க வைப்பது போன்ற முன்னெடுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு ஆவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் ஒரு சாமியானா, வீல் சேர், போன்ற குறிப்பிட்ட வசதிகள் இருப்பதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...