திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக குண்டடத்தில் நடிகர் வாகை சந்திரசேகர் பிரச்சாரம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பேருந்து நிறுத்தம் முன்பு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக நட்சத்திர பேச்சாளரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவருமான நடிகர் வாகை சந்திரசேகர், பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்த மக்களவை தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதில் பாஜக வெற்றி பெற்று விட்டால், அடுத்து இந்தியாவில் தேர்தலே நடக்காது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில். வாக்களித்து வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பினால் தான், மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும்.



நான் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். அனைத்து வேஷங்களையும் போட்டுள்ளேன். உங்கள் முன் வரும்போது, திமுக தொண்டனாக, உங்களில் ஒருவனாக நின்று வாக்கு கேட்கின்றேன். ஆனால் பிரதமர் மோடி விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு, நாட்டு மக்களை மறந்து விட்டு, சினிமா நடிகர் போல் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். என தெரிவித்தார்..

இந்த பிரச்சாரத்தின் போது ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் இ.ல. பத்மநாபன், குண்டடம் திமுக நகரச் செயலாளர் அன்பு, ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...