பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பரப்புரை

மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்படும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரீசிலனை செய்யப்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், டீசல், விலை குறைக்கப்படும், உலகத்திலேயே கேடுகெட்ட மானங்கெட்ட முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்தவர் பாதம்தாங்கி எடப்பாடி பழனிசாமி என்றும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது திராவிட மாடல் ஆட்சி என்றும், தரமான காலை உணவுதிட்டம், கல்வி கொடுத்து வருவது திராவிட மாடல் அரசு என்றும், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...