உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கை உடன் உடுமலை - பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் நிகழ்வாக பூச்சொரிதலும் அதைத் தொடர்ந்து நோன்பு சாட்டுதலும் நடைபெற்றது. 2-வது நிகழ்வாக கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கம்பம் மேலதாளங்கள், வானவேடிக்கை முழங்க உடுமலை- பொள்ளாச்சி சாலை வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.



அதைத் தொடர்ந்து கம்பம் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பீடத்தில் போடப்பட்டது. பின்னர் பூவோடு கோவிலை மூன்று முறை வலம் வந்து கம்பத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தர்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்வையொட்டி உடுமலை போலீசார் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...