தமிழக மக்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கம்

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அவரை உலகத் தலைவராக்கியுள்ளன. உலக நாடுகள் பலவும் அவரது ஆலோசனையை கேட்கின்றன என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்? தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 17, புதன்கிழமை) தேர்தல் பிரசாரம் முடிகிறது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. அன்று அளிக்கப் போகும் வாக்குதான் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியா செல்லப்போகும் பாதையை தீர்மானிக்கப் போகிறது.

உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. இஸ்ரேல் ஈரான் போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். இதனால் உலகமே இரு பிரிவாக பிரிந்து போக வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழலில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வலுவான, நிலையான, துணிச்சலான அரசு இருக்க வேண்டியது அவசியம்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் அவரை உலகத் தலைவராக்கியுள்ளன. உலக நாடுகள் பலவும் அவரது ஆலோசனையை கேட்கின்றன. எனவே, வலுவான, துணிச்சலான தலைவரான நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டிலிருந்தும் பாஜகவுக்கு எம்.பி.க்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களின் குரல் டெல்லியை சென்றடையும். தமிழ்நாடு மட்டும் மாற்றி வாக்களித்தால் 2014, 2019 போல எந்தப் பலனும் இருக்காது. இதை உணர்ந்து தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு தாமரை, மாம்பழம், சைக்கிள், பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

1.அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல நூற்றாண்டுகள் காத்திருந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பால் கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழைக் கூட பெற மறுத்து மனைவியை பெற்றுக் கொள்ளச் சொன்னவர் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஸ்ரீராமரை அவமதித்த ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

2. இந்தியா மதச்சார்பின்மை நாடு. மதச்சார்பின்மை என்றால் அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். ஆனால், அனைத்து தரப்பினருக்கும் பொதுவான முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறுகிறார். ஆனால், இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இந்துக்களுக்கு வாழ்த்து கூறக்கூட மனமில்லாத திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாடம் புகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

3. அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். இரு கட்சிகளிடையே கருத்து மோதல் இருக்கலாம். இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். ஆனால், இரு அரசுகளுக்கு இடையே அதாவது மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மோதல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஆனால், மத்திய அரசை எதிரிநாட்டு அரசு போல பார்த்து எதற்கெடுத்தாலும் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. இதற்கு முடிவுகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

4. Q601 60760T - பெங்களூர் அதி விரைவுச் சாலை, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி தராமல் திமுக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் இதுபோன்ற அநீதிகளுக்கு முடிவுகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

5. திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என்று திரும்ப திரும்ப கூறி தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற அடையாளத்தை திமுக அழித்து வருகிறது. திமுக கட்சியின் பெயரிலும் தமிழ் இல்லை. திமுக தலைவரின் பெயரில் தமிழ் இல்லை. தமிழர் பண்டிகையான தைப்பூசம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தமிழ்ப் புத்தாண்டு. ஆடிப்பெருக்கு போன்ற தமிழர் பண்டிகைகளை திமுக கொண்டாடுவதில்லை. கொண்டாடுபவர்களை கேலியும், கிண்டலும் செய்து அவமதிக்கிறார்கள். தமிழர்களை அவமதிக்க தமிழ்ப் புத்தாண்டை மாற்றினார்கள். சூரிய கடவுளை வழிபடும் பொங்கல் பண்டிகையின் பக்தி என்ற ஆன்மாவை அழித்து அதை வெறும் கொண்டாட்டமாக மாற்ற முயற்சித்து வருகிறார்கள். செருப்பு அணிந்து கொண்டு பொங்கல் வைக்கிறார்கள். இப்படி தமிழ், தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை அழிக்கும் சக்திகளுக்கு முடிவுகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

6. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த, மனித இனமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவம் நடந்து ஓராண்டு கடந்தும் இன்னும் ஒருவர்கூட கைது செய்யப்படவில்லை. இதுபோன்ற சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்ததாக குற்றச்சாட்டு வந்தபோது, இரவோடு இரவாக அந்த குடிநீர் தொட்டியை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். இதுதான் திமுகவின் சமூக நீதி. இதற்கு பாடம் புகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். 

 7. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை திமுக அளித்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அதில் 50 வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் விலை ரூ. 5 குறைக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும். காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும், மாதம் ஒருமுறை மின் அளவீடு கணக்கிடும் முறையை கொண்டு வருவோம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்போது மக்களவைத் தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றும் திமுகவுக்கு பாடம் புகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

8. தமிழகத்தில் தலைநகர் சென்னை தவிர கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற கொங்கு மண்டலங்கள், தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி பகுதிகள் தான் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகின்றன. இதற்கு அந்தந்தப் பகுதியில் சமூகங்களே காரணம். அவர்கள் ஒருங்கிணைந்து தொழில் துவங்கி, தாங்களும் வளர்ந்து தமிழ்நாட்டையும் வளமாக்கியிருக்கிறார்கள். அரசின் முயற்சியால் தொழில் துறை வளர்ந்திருந்தால் மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி போன்ற பகுதிகள் தொழில்கள் வந்திருக்க வேண்டும். இப்படி பாதி தமிழகத்தை ஒன்றுமில்லாமல் வைத்திருக்கும் ஆண்ட, ஆளும் கட்சிகளுக்கு பாடம் புகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

9. திமுக கூட்டணியை வெளிப்படையாக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கவில்லை. ஆனால், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராகுலை முன்னிறுத்திதான் பிரசாரம் செய்து வருகிறார். ஒரு காலத்தில் தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராகுல் இப்போது பிரிவினைவாதம் பேசும் திமுக, திராவிடர் கழக நிர்வாகி போல பேசி வருகிறார். இந்தியா என்பது ஒரு நாடல்ல என்கிறார். இப்படி பிரிவினைவாதம் பேசும், தேசியத்திற்கு எதிராகப் பேசும் ஒருவர் பிரதமரானால் நாட்டின் நிலை என்னவாகும், ஒரு காலத்தில் பஞ்சாப், காஷ்மீர் இருந்ததைப் போல ஒட்டுமொத்த இந்தியாவும் மாறிவிடும். இந்த பேராபத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

10. தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த அன்பு வைத்துள்ளதாக கோவை, திருநெல்வேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரது அன்பை 2019 இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது பார்த்தோம். அன்றைய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசின் துணையுடன் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படி தமிழர் இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இன்று தமிழர்கள் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி கொலைவழக்கில் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு. கருணை அடிப்படையில் முன் விடுதலையான பேரறிவாளனை கட்டியணைத்து தனது பேரன்பை வெளிப்படுத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்படிப்பட்டவரை இனிப்பு வாங்கிக் கொடுத்து எனது அண்ணன் என்கிறார் ராகுல் காந்தி. இப்படி தமிழ்நாட்டை நாடகமேடையாக்கி மக்களை ஏமாற்ற நாள்தோறும் நாடகம் நடத்தும் சக்திகளுக்கு பாடம் புகட்ட பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வானிதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...