நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

குடியிருப்பிற்காக நொய்யல் ஆற்றை கடந்து 8 இஞ்ச் பைப் போடப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கே 2 இஞ்ச் பைப் தான் அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்க விவசாயிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சியரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்க விவசாயிகள், 2019ம் ஆண்டு நானா நானி என்ற கட்டுமான நிறுவனத்தின் விவசாய நிலத்துக்கு நீர் கொண்டு வர வெள்ளியங்கிரி அடிவாரத்தில் கிணறு வெட்டி நீர் கொண்டு சொல்ல அவர்கள் அனுமதி வாங்கி இருந்ததாகவும், அப்போதே அந்த அனுமதி தவறு என கூறி உயர்நீதிமன்றத்தில் தாங்கள் வழக்கு தொடர்ந்தாக கூறினர்.



அந்த வழக்கு தங்களுக்கு சாதகமாக வந்து, அவர்கள் போட்டுள்ள பைப் லைன்களை எடுக்க நீதிமன்றம் கூறியதாகவும், பின்னர் குடியிருப்பின் உரிமையாளர் போலி கடிதம் ஒன்றை தாசில்தாரிடம் அளித்ததாக நீதிமன்றத்தில் அளித்துள்ளதாகவும், இந்நிலையில் அந்த கடிதத்தின் உண்மை அறிக்கையை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினர்.

அவர்களின் இந்த செயலால் அப்பகுதி விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்படுவோம் எனவும், மக்களுக்கும் குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனவும் கூறினர். நொய்யல் ஆற்றங்கரை ஓரமாகவே கிணறு வெட்டி போர்வேல் போட்டுள்ளார்கள் எனவும், அதற்கான அனுமதியெல்லாம் விதிமுறைகளுக்கு முரணாக பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர். அப்பகுதியில் பைப் லைன் போடுவதற்கு விவசாயிகளுக்கே அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற நிலையில் இவர் விவசாயி என்று கூறி அனுமதி பெற்று பைப் லைன் போட்டுள்ளதாக தெரிவித்தனர்.



இதனை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் மீது அவர் அப்பீல் செய்துள்ளார் எனவும், இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உண்மை அறிக்கை தருவதாக கூறியுள்ளார் என கூறினர். குடியிருப்பிற்காக நொய்யல் ஆற்றை கடந்து 8 இஞ்ச் பைப் போட்டுள்ளார்கள் எனவும், விவசாயிகளுக்கே 2 இஞ்ச் பைப் தான் அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் அளித்துள்ளதாக அவர்கள் கூறுவதாகவும், ஆனால் மாவட்ட ஆட்சியர் அவ்வாறு எந்த கடிதமும் வரவில்லை என்கிறார் என தெரிவித்தனர். அவரது குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஆற்றை ஒட்டி கிணறு வெட்டி நீர் எடுப்பதாகவும், இதன் மூலம் சுமார் 4000 ஏக்கர் பாசன விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் மேலும் அங்கு நிலத்தடி நீரும் போய்விடும் என கூறினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...