வடவள்ளியில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது

கோவில் அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் என்பவர் கோவில் நகைகளை திருடி, அவற்றை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் விற்று பணத்தை வாங்கியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான உப கோவிலான அருள்மிகு கரி வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், தற்காலிக தினக்கூலி அர்ச்சகராக ஸ்ரீவத்சாங்கன் (40) என்பவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரை சேர்ந்த இவர், வடவள்ளி பகுதியில் தங்கியிருந்து பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23 ம் தேதியன்று இந்து சமய அறநிலை துறை இணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து துணை ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்தில் உள்ள நகைகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டு மணிகள் திருடப்பட்டு இருப்பதும், அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.இது தொடர்பாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையாளர் ஹர்ஷினி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகைகளை திருடியதும், திருடப்பட்ட நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் விற்று பணத்தை வாங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தங்கம் ஜுவல்லரியின் உரிமையாளரை வரவழைத்து அந்த14 கிராம் தங்கத்திலாலான தாலி மற்றும் குண்டு மணிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கனை காவல் துறையினர் நேற்று ஏப்ரல்.25 கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அர்ச்சகர் ஸ்ரீவத்சாங்கன் மீது கடந்த ஆண்டு புதுப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோவிலில் எட்டு கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதற்காக புழல் ஜெயிலில் 60 நாள் சிறை தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...