கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், சௌவுரிபாளையம் ஆகிய பகுதிகளில் பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.

இது குறித்து அவர்கள் கூறும்போது, 56 வார்டு பகுதியில் பாதாள சாக்கடைக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு பணி நிறைவேறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமதிற்கு உள்ளாவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக கூறினர். மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்கடை குப்பைகளால் சுகாதார கேடு எற்படுவதாக குற்றம் சாட்டினர். 66வது வார்டு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதுடன் தண்ணீர் தேக்கத்தால் சாலைகள் பழுதடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறியவர்கள் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி சத்துணவு கூடம் அருகிலேயே சாக்கடை கால்வாய் ஓடுவதால் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.