அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பேருந்து  நிலையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், சௌவுரிபாளையம் ஆகிய பகுதிகளில் பொது பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டது.



இது குறித்து அவர்கள் கூறும்போது, 56 வார்டு பகுதியில் பாதாள சாக்கடைக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு பணி நிறைவேறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமதிற்கு உள்ளாவதுடன் விபத்துகள் ஏற்படுவதாக கூறினர். மேலும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்கடை குப்பைகளால் சுகாதார கேடு எற்படுவதாக குற்றம் சாட்டினர். 66வது வார்டு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதுடன் தண்ணீர் தேக்கத்தால் சாலைகள் பழுதடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறியவர்கள் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி சத்துணவு கூடம் அருகிலேயே சாக்கடை கால்வாய் ஓடுவதால் அங்கு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் அதை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...