கோவையில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் பேருந்து முன் பாய்ந்து உயிரிழப்பு – சிசிடிவி காட்சி வெளியீடு

அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உறவினர்கள் அழைத்து வந்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட ஆனந்த் என்பவர் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (40). இவருக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஆனந்த்துக்கு கடந்த 21 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.



இதனால் சிகிச்சைக்காக அவரது தாய் மற்றும் பாட்டி ஆனந்தை பேருந்தில் அழைத்துச் செல்ல இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் ஆனந்த் பாய்ந்தார். இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...