தமிழ்நாட்டில் சென்ற வருடம் பருவமழை பெய்யாததால், தமிழகம் முழுவதும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்டம் பவானி ஆற்றில் அனுமதியின்றி விசைப்பம்புகள் மூலம் ஒரு சிலர் தண்ணீரை எடுத்துவருவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி வருவாய் கோட்டசியர் ஆர்.சின்னசாமி பவானி ஆற்றில் அனுமதியின்றி தண்ணீரை எடுக்கும் விசைப்பம்புகளை பறிமுதல் செய்தார். அருகில் வட்டாச்சியர் டேனியல் உள்ளார்.