கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக ஒதுக்கி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழர்கள் மனு

இரண்டு மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வீடுகளை ஒதுக்கி தந்தால்தான், தங்களுடைய குழந்தைகளை கோட்டூர் பகுதியில் இருந்து ஆழியாறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் 217 குடும்பங்கள் கடந்த 2000 ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் அரசு உத்தரவின்படி அவர்கள் வசித்து வந்த கோட்டூர் பகுதியில் உள்ள முகாமிடத்தை சீரமைத்து மொத்தம் 112 வீடுகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த இலங்கை அகதிகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது 12 குடும்பங்களுக்கு மட்டும் அங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. மீதம் இருந்த 15 குடும்பங்களுக்கு ஆழியார் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டது. தற்பொழுது அதன் திறப்பு விழாவும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் அந்த 15 குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் ஒதுக்கி தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு மின்சார வசதி செய்யவில்லை என்பது போன்ற பல காரணங்களை கூறுகின்றனர். இந்நிலையில் அந்த 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் தற்பொழுது தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். மேலும் இரண்டு மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. உடனடியாக வீட்டை ஒதுக்கி தந்தால் தான் தங்களுடைய குழந்தைகளை கோட்டூர் பகுதியில் இருந்து ஆழியாறு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்து விட முடியும். அவருடைய கல்வி செலவையும், எங்களுடைய குடும்ப செலவுகளையும் சிரமம் இன்றி நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே தங்களுக்கு உடனடியாக அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை ஒதுக்கி தரவேண்டும். மேலும் அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து கொடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...