திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணி நிறுத்தம் - மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முத்தனம்பாளையம்-விஜயாபுரம் இணைப்பு சாலை போடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்ட நிலையிலும் இன்னும் பணிகள் தொடங்காததன் காரணமாக 9 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூந்தோட்டம், வள்ளலார் அவன்யூ உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். முத்தனம்பாளையம் - விஜயாபுரம் இணைப்பு சாலை போடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்ட நிலையிலும் இன்னும் பணிகள் தொடங்காததன் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்கு செல்லும் பொதுமக்கள் என ஏராளமானார் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள நிலையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட மிகப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக காலம் தாழ்த்தாமல் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கையில் பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மண்டல அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...