காவல்துறை சுயமாக இயங்க வேண்டும் - கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். கோவையில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான தங்க நகைப் பட்டறை உரிமையாளர் மற்றும் ஊழியரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.



கோவையில் கடந்த 22 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்க நகைப்பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர் சாந்தகுமார் ஆகிய இருவரை காரில் வந்த மர்ம கும்பல் தாக்கி 33 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கொள்ளையார்களால் தாக்குதலுக்கு உள்ளான ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமாரை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரியிடம் செல்போனில் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, கோவை செல்வபுரம் சுற்றுவட்டார பகுதியில் நகைக் கடை உரிமையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை வாங்கி நகையாக செய்து கொடுக்கும் பணிகளை குடிசைத் தொழிலாக ஏராளமான மக்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி செல்வபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் இருசக்கர வாகனத்தில் நகைகளை எடுத்துக்கொண்டு சென்றபோது காரில் வந்த மர்ம நபர்கள் திட்டமிட்டு இருவரையும் அறிவால் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை பறித்து சென்றனர். அறிவால், இரும்பு கம்பிகளால் தாக்கி நகையை பறிக்கும் மோசமான கலாச்சாரம் கோவையில் ஏற்பட்டுள்ளது. இதுவரை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஆனால் நகைகள் இன்னும் மீட்டுக் கொடுக்கப்படவில்லை.

மேலும் சம்பவம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தங்க நகை பட்டறை தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். கோவையில் காவல்துறை சுயமாக இயங்க வேண்டும். இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது. அதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வருகிறோம். தொடர்ந்து அந்த பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...