கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், ஊட்டி மலை ரயிலில் ஜூன் 30ந்தேதி வரை டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது. மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையும், குன்னூர் முதல் உதகை வரையும் மலை ரயில்கள் இயக்கப்படுகிறது.
கோடை சீசன் நெருங்கி விட்டதால், இந்த ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, வரும் ஜூன் மாதம் 30ந் தேதி வரை டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள், ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.