பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டி வரும் தடுப்பணைகளை படமெடுக்க கடந்த 29-ம் தேதியன்று கேரளா சென்ற குமுதம் இதழின் பத்திரிகையாளரை சீருடை அணியாத 2 கேரள காவல்துறையினர் உள்ளிட்ட சில நபர்கள் வழி மறித்து மிரட்டியதோடு, விரட்டியடித்தனர்.
கேரள மாநில காவல்துறையினரின் இத்தகையபோக்கைக் கண்டித்து இன்று காலை கோவையில் அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு கேரள மாநில காவல்துறையினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.